/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
/
ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
ADDED : அக் 16, 2025 08:36 PM
ஆனைமலை: ஆனைமலை அருகே லட்சுமி வித்யா பவன் மெட்ரிக் பள்ளியில், ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கோவை மாவட்ட, 'எனது இளைய பாரதம்' சார்பில், ஒன்றிய அளவிலான போட்டிகள், ஆனைமலை மீனாட்சிபுரம் லட்சுமி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில், ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடினர். ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.