/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணர் கோவிலில் மத்திய அமைச்சர் முருகன் தரிசனம்
/
ராமகிருஷ்ணர் கோவிலில் மத்திய அமைச்சர் முருகன் தரிசனம்
ராமகிருஷ்ணர் கோவிலில் மத்திய அமைச்சர் முருகன் தரிசனம்
ராமகிருஷ்ணர் கோவிலில் மத்திய அமைச்சர் முருகன் தரிசனம்
ADDED : ஜன 31, 2024 02:13 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கோவிலில், மத்திய இணை அமைச்சர் முருகன், சுவாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் புதிதாக பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 16ம் தேதி நடந்தது. இங்கு, 48 நாட்கள் மண்டல பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன், நேற்று காலை வந்தார். வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் வரவேற்றார்.
கோவிலுக்குள் சென்ற மத்திய அமைச்சர் முருகன், பளிங்கு கல்லால் வடிவமைக்கப்பட்டிருந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவுருவ சிலையை வணங்கினார்.
தொடர்ந்து, கோவிலை சுற்றி பார்த்த அவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்களின் படங்கள், ராமகிருஷ்ணருக்கு காளிதேவி ஆசி வழங்கிய காட்சிகளின் சிற்பங்கள் குறித்து, சுவாமி கரிஷ்டானந்தர் விளக்கினார்.
கோவிலை பார்வையிட வந்திருந்த பள்ளி குழந்தைகளை வாழ்த்தி, அவர்களுடன் அமைச்சர் முருகன், போட்டோ எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, வித்யாலயா வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் பூங்கா மற்றும் ராமாயண தீம் பார்கையும் சுற்றிப் பார்த்தார்.
நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா, பொதுச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், நிர்வாகிகள் சதீஷ்குமார், மகேந்திரன், மகேந்திர ராஜ், பாலு, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.