sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னை நார் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்! மத்திய இணை அமைச்சர் உறுதி

/

தென்னை நார் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்! மத்திய இணை அமைச்சர் உறுதி

தென்னை நார் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்! மத்திய இணை அமைச்சர் உறுதி

தென்னை நார் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்! மத்திய இணை அமைச்சர் உறுதி


ADDED : ஜூலை 11, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூலை 11, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; ''பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில், தென்னை நார் பரிசோதனை ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்,'' என, மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் உறுதியளித்தார்.

மத்திய அரசின் கயிறு வாரியம் சார்பில், கருத்தரங்கம் மற்றும் தென்னை நார் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே தனியார் ரிசார்ட்டில் நேற்று நடந்தது. கயிறு வாரியம் செயலாளர் அருண் வரவேற்றார். கயிறு வாரிய தலைவர் விபுல் கோயல் பேசினார்.

மத்திய சிறு, குறு தொழில்துறை இணை அமைச்சர் ேஷாபா கரந்த்லாஜே பேசியதாவது:

தென்னை மரம், 'கற்பக விருட்சமாக' உள்ளது. இளநீர், தென்னை மட்டை என அனைத்தும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. தேங்காய் பால், தாய்பாலுக்கு நிகரானதாகும்.

கயிறு வாரியம் வாயிலாக, தென்னை நார் தொழில் மேம்படுத்த மானியங்கள் வழங்கப்படுகிறது. சீனாவில் இருந்து புதிய இயந்திரங்களை கொண்டு வந்தாலும் அதை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் தெரிவதில்லை.

புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் வகையில், திறன் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உற்பத்தியாளர்களும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள திறன்களை புதுப்பிக்க வேண்டும். இதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

கயிறு பொருட்களை தயாரித்து விற்க மார்க்கெட்டிங், பிராண்டிங் முக்கியமானதாகும். இதை நாம் உணர வேண்டும்.தற்போது பிளாஸ்டிக் மாற்றாக வெளிநாடுகளில் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். நமது நாட்டிலும் தற்போது மாற்றங்கள் ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக்கு மாற்றாக தென்னை நார் பொருட்களை பயன்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் கயிறு வாரியம் வாயிலாக இத்தொழிலை மேம்படுத்த, 1953ல் ஏற்படுத்தப்பட்ட கயிறு வாரியம் சட்டம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், தொழில்களில் இருந்த பல தடைகள் நீங்கி புதிய பரிமாணத்துக்கு தென்னை நார் தொழிற்சாலைகள் மேம்படும் சூழல் உள்ளது.

கர்நாடகாவில் ஆய்வு கூடம் இருப்பது போல, பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கயிறு வாரியத்துக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தில், தென்னை நார் பரிசோதனை ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

காயர் பித்துக்கு ஜி.எஸ்.டி., விதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது வரை, 6 கோடிக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

'ஜெம் போர்ட்டல்' (மத்திய அரசின் ஆன்லைன் சந்தை) பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக, சிறு, குறு, நடுத்தர தொழிலை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தியாளர்கள் இதில் பதிவு செய்ய வேண்டும்.

'விக்சித் பாரத் 2047' நாட்டை தன்னிறைவு மற்றும் வளமான பொருளாதாரமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கமாகும். அதை மனதில் கொண்டு, உடல் நலம், திறன் மேம்பாடு, தொழில் ஆர்வத்துடன் செயல்பட்டு மேம்படுத்துவோம்.

இவ்வாறு, பேசினார்.

இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தென்னை நார் உற்பத்தியாளர்கள், கூட்டுக்குழுமத்தினர், உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஜி.எஸ்.டி., நீக்க வேண்டும்!

தென்னை நார் உற்பத்தியாளர்கள் பேசுகையில், 'தென்னை நார் தொழிலை மேம்படுத்த, 19 கூட்டுக்குழுமங்கள் துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஒன்பது கூட்டுக்குழுமங்கள் நன்றாக செயல்படுகின்றன. மேலும், நவீன இயந்திரங்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்னை நார் தொழில், மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காயர் பித் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இது குறித்து பரிசீலித்து ஜி.எஸ்.டி., நீக்க வாய்ப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுகட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.








      Dinamalar
      Follow us