/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிட வாய்ப்பு
/
நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிட வாய்ப்பு
நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிட வாய்ப்பு
நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிட வாய்ப்பு
ADDED : மார் 13, 2024 01:38 AM
அன்னுார்:நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவிநாசி மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் எல்லப்பாளையத்தில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நந்தகுமார் பேசுகையில், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி தொகுதியில் ஒரு லட்சம் வீடுகளில் நமது சின்னம் அச்சடிக்கப்பட்ட டோர் சிலிப்பை ஒட்ட வேண்டும். ஓட்டுப்பதிவு நாள் வரை முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
மாவட்ட நிர்வாகிகள் பேசுகையில்,' நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் கவனம் செலுத்தி நம் தொகுதியில் உள்ள செல்வாக்கான நபர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது, மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று தருவது, திண்ணை பிரசாரம் செய்வது ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்,' என அறிவுறுத்தினர்.
கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, நீலகிரி தொகுதி இணை அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீ நந்தகுமார், மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

