/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுக்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர்
/
பசுக்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர்
ADDED : அக் 11, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்:கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று வந்திருந்தார். இதன் ஒரு பகுதியாக, நரசீபுரம் பகுதியில், தனியார் பராமரிப்பில் உள்ள வெள்ளியங்கிரி கோசாலைக்கு வந்தார். பராமரிக்கப்படும் நுாற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகள், காளை மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதன்பின், நரசீபுரம் பகுதியில், ஆக. 30ல் வீட்டின் முன்புள்ள செடியில் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது, காட்டு யானை தாக்கி காயமடைந்த சப்தகிரி,93 என்ற முதியவரின் வீட்டிற்குச் சென்று, உடல்நலம் கேட்டறிந்தார். அப்போது, பா.ஜ., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.