/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருக்களில் ஜாதிப்பெயர் நீக்கம் எப்போது? நெறிமுறைகள் வர காத்திருப்பு
/
தெருக்களில் ஜாதிப்பெயர் நீக்கம் எப்போது? நெறிமுறைகள் வர காத்திருப்பு
தெருக்களில் ஜாதிப்பெயர் நீக்கம் எப்போது? நெறிமுறைகள் வர காத்திருப்பு
தெருக்களில் ஜாதிப்பெயர் நீக்கம் எப்போது? நெறிமுறைகள் வர காத்திருப்பு
ADDED : அக் 11, 2025 10:30 PM

கோவை:கோவையில் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதிப்பெயர்களை நீக்க, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்பார்த்து, மாநகராட்சி நிர்வாகம் காத்திருக்கிறது.
'காலனி என்கிற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், அரசு ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து, அவ்வார்த்தையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏப்., 29ல் சட்டசபையில் அறிவித்தார்.
தொடர்ந்து, தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் ஜாதிப்பெயர்களை நீக்கவும் மறு பெயரிடுதல் தொடர்பாகவும் ஏப்., மே மாதங்களில் அரசின் சார்பில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, அனைத்து பகுதிகளிலும் உள்ள ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் என, அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தெரிவித்தார்.
மேலும், 'கலெக்டர் தலைமையிலான குழு இந்நடவடிக்கை மேற்கொள்ளும்.
''பொதுப் பெயர்களை அப்பகுதி மக்களின் ஒப்புதலுடன் சூட்டுவதில் ஆட்சேபனை இல்லை; வழிகாட்டு நெறிமுறைகளின்படி உடன்பட்டு இருந்தால் போதுமானது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''அரசு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கியவுடன், ஜாதிப்பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.