/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
ADDED : அக் 11, 2025 10:29 PM
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோயில். நேற்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் அரங்கநாத பெருமாள், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். காலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
தாங்கள் கொண்டு வந்த காய்கறி, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை தாசர்களுக்கு பக்தர்கள் படைத்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பேபி ஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.