sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பவானி ஆற்று தண்ணீரை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

/

பவானி ஆற்று தண்ணீரை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

பவானி ஆற்று தண்ணீரை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

பவானி ஆற்று தண்ணீரை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்


ADDED : பிப் 13, 2025 11:26 PM

Google News

ADDED : பிப் 13, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கருப்பு நிறத்தில் தண்ணீர் தேங்கி இருந்த பவானி ஆற்று தண்ணீரை, நேற்று காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், எம்.எல்.ஏ.,வும் ஆய்வு செய்தனர். ஆனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வராததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வரை, பவானி ஆற்றில் இருந்து, 17 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆற்றுத் தண்ணீரால், பல லட்சம் மக்கள் குடிநீர் பெற்று பயனடைந்து வருகின்றனர். ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை, சுத்தம் செய்து அதன்பின் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன், ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்தது. இந்த தண்ணீரை ஜடையம்பாளையம், சிக்காரம்பாளையம் ஆகிய ஊராட்சி நிர்வாகத்தினர், சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். ஆனாலும், குடிநீர் நிறம் மாறால் இருப்பதோடு, ஒருவித வாசம் அடித்ததால், பொதுமக்கள் ஜடையம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தினமலரில்போட்டோவுடன் நேற்று செய்தி வெளியானது. மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் சேர்மன் மணிமேகலை, ஜடையம்பாளையம் ஊராட்சி செயலர் நந்தினி, பெள்ளாதி ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதி குமரேசன், முன்னாள் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர், ஆலாங்கொம்பு பழையூரில், பவானி ஆற்றை ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து காரமடை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி, அலுவலர் நாகரத்தினசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். பவானி ஆற்றில் தேங்கி நிற்கும் தண்ணீர், எதனால் கருப்பு நிறத்தில் நிறம் மாறியது. அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்தால் மட்டுமே, உண்மை நிலை தெரிய வரும், என அதிகாரிகளும் தெரிவித்தனர். இதை அடுத்து ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு, ஆலாங்கொம்பில் பவானி ஆற்றில் கிணறு அமைத்து, அதில் இருந்து தண்ணீர் எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' பவானி ஆற்றில், மேட்டுப்பாளையம் நகராட்சி கழிவுநீர் மற்றும் ஆலைகளின் கழிவுநீர் வந்ததால் தான், தண்ணீர் கருப்பு நிறமாக மாறியுள்ளது.

ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டு இல்லாமல் தேங்கி இருப்பதால், கழிவுநீரும் தேங்கி உள்ளது என தெரிய வருகிறது. பல லட்சம் மக்கள் குடிக்கும் குடிநீர் கருப்பு நிறமாக மாறியதை அடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், இப்பகுதிக்கு வந்து நேரடியாக பவானி ஆற்றை ஆய்வு செய்து இருக்க வேண்டும்.

ஆனால் அதிகாரிகள் வராததுதான் வருத்தமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக, இப்பகுதியில் பவானி ஆற்று தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து, எதனால் தண்ணீர் கருப்பு நிறமாக மாறியது என்பதை, பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us