/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் முன்பணம் வழங்க தொழிற்சங்கம் வேண்டுகோள்
/
பொங்கல் முன்பணம் வழங்க தொழிற்சங்கம் வேண்டுகோள்
ADDED : ஜன 05, 2024 11:38 PM
வால்பாறை;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, முன் கூட்டியே முன்பணம் வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏ.டி.பி., (அ.தி.மு.க.,) தொழிற்சங்க மாநில செயலாளர் அமீது கூறியதாவது: தமிழகத்தில், கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 1.5 லட்சம் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்டேட்களில் பணிபுரியும் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி, இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை கால முன்பணம், 4,500 ரூபாய் முன்கூட்டியே வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை, அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் செய்துதர வேண்டும். மனித - வனவிலங்கு மோதலுக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். எஸ்டேட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள ரோடுகளை, நகராட்சி சார்பில் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.