/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியின் ஆண்டு விழா
/
யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியின் ஆண்டு விழா
ADDED : மார் 24, 2025 05:34 AM

கோவை: பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் தொழில்நுட்பக் கல்லுாரியில், 16ம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பெங்களூரு, எக்ஸாவேர் டெக்னாலஜிஸ் எச்.ஆர்., ஆப்ரேசன் ஸ்பெஷலிஸ்ட் காயத்திரி கலந்து கொண்டார். மாணவர்கள் வளாகத் தேர்வை எப்படி எதிர்கொள்வது மற்றும் திறன்களை எப்படி வளர்த்துக்கொள்வது என்பது குறித்து விளக்கினார்.
கல்வி, வருகைப்பதிவு, விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
யுனைடெட் கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் அருண் கார்த்திகேயன், இணைத் தலைவர் மைதிலி, யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் அப்துல் ரப், துணை முதல்வர் கோகிலா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.