/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுனைடெட் டிராபி விளையாட்டுப் போட்டிகள்
/
யுனைடெட் டிராபி விளையாட்டுப் போட்டிகள்
ADDED : ஜூலை 18, 2025 09:48 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே யுனைடெட் பார்மசி கல்லூரியில் நான்காம் ஆண்டு, மாநில அளவிலான யுனைடெட் டிராபி விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
52 பார்மசி கல்லூரிகள் சார்பில், 3,200 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கால்பந்து, வாலிபால், கபடி, கிரிக்கெட், செஸ், மாணவிகளுக்கான த்ரோபால், டெனிகாய்ட் மற்றும் கோகோ போட்டிகள், தடகள போட்டிகள், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என பல போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடந்தன. விழாவுக்கு யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
கால்பந்து போட்டியில், ஆண்கள் பிரிவில், ஈரோடு பார்மசி கல்லூரி அணியும், கபடி போட்டியில் யுனைடெட் பார்மசி கல்லூரி அணியும், வாலிபால் போட்டியில் லட்சுமி நாராயணா கல்லூரி அணியும், செஸ் போட்டியில் கே.எம். சி.எச்., அணியும், முதலிடம் பெற்றன.
பெண்களுக்கான கோகோ போட்டியில், எஸ்.எம்.எஸ்., கல்லூரி அணியும், டெனிகாய்ட் ஒற்றையர், இரட்டையர் போட்டிகளில் மதர் தெரசா கல்லூரி அணியும் முதலிடம் பெற்றன.