/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி சான்றிதழ்களை வைத்திருக்காதீர் கல்லுாரிகளுக்கு பல்கலை அறிவுறுத்தல்
/
கல்வி சான்றிதழ்களை வைத்திருக்காதீர் கல்லுாரிகளுக்கு பல்கலை அறிவுறுத்தல்
கல்வி சான்றிதழ்களை வைத்திருக்காதீர் கல்லுாரிகளுக்கு பல்கலை அறிவுறுத்தல்
கல்வி சான்றிதழ்களை வைத்திருக்காதீர் கல்லுாரிகளுக்கு பல்கலை அறிவுறுத்தல்
ADDED : மார் 06, 2024 01:34 AM
கோவை,;கல்லுாரிகள், ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை, ஆய்வுக்கு பின்னர் திருப்பி அளித்துவிட வேண்டும் என பாரதியார் பல்கலை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லுாரிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பணிக்கு சேரும் முன், அவர்களின் கல்வித்தகுதியை உறுதி செய்யும் பொருட்டு, ஆய்வுக்காக அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க கூறுவது வழக்கம்.
பல கல்விநிறுவனங்கள், இச்சான்றிதழ்களை திருப்பி அளிக்காமல், தங்களிடமே வைத்திருப்பதாக பல்வேறு தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கல்லுாரிகள் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தபின், அனைத்து அசல் சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்டவர்களிடம் உடனடியாக திருப்பிக்கொடுத்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பி அளிக்காதபட்சத்தில், பல்கலையில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ' கல்லுாரிகள் அசல் சான்றிதழ் வைத்திருக்கக் கூடாது என சிண்டிகேட் தீர்மானம் சார்ந்த அறிக்கை, கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சில கல்லுாரிகள் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு, ஆசிரியர்களை, 'கார்னர்' செய்வதாக புகார் வருகின்றன. இதுகுறித்து, உரிய அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளோம்' என்றார்.

