/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
பல்கலை ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2025 09:54 PM

கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரானார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், யு.ஜி.சி., நெறிமுறைகளின்படி, கல்லுாரி ஆசிரியர்க ளுக்கு எம்.பில்., பி.எச்டி., பட்டத்துக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், இணை பேராசிரியர் பணி மேம்பாட்டுக்கு பி.எச்டி., கட்டாயம் என்பதை தளர்த்த வேண்டும், கல்லுாரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பதவிக்கான கல்லுாரி கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணையை, உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, பல்கலை ஆசிரியர் சங்க செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். 60 பேராசிரியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலட்சுமியிடம் வழங்கினர்.