/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை வாலிபால் அணி வீரர்கள் தேர்வு; 'பி'-மண்டலத்தில் 21 அணிகள் பங்கேற்பு

ADDED : டிச 12, 2024 11:37 PM

கோவை; பாரதியார் பல்கலை வாலிபால் அணியில் இடம்பெறும் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலையில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும், 18 முதல், 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கென, 14 பேர் அடங்கிய அணி பல்கலைகளில் இருந்து அனுப்பிவைக்கப்படுகிறது.
பாரதியார் பல்கலை அணியை தேர்வு செய்யும் விதமாக, நேற்று மூன்று மண்டலங்களில் வாலிபால் போட்டிகள் துவங்கின; இன்று நிறைவடைகிறது. கோவை அரசு கலைக் கல்லுாரியில் 'பி'-மண்டலத்துக்கு உட்பட்ட, 21 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
அரசு கலைக் கல்லுாரி முதல்வர் எழிலி போட்டிகளை துவக்கி வைத்தார். முதல் போட்டியில், ஏ.ஜி., கலைக் கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில் தொண்டாமுத்துார் அரசு கலைக் கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து, கோவை கலைமகள் கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில் பிஷப் அம்புரோஸ் கல்லுாரியை வென்றது.
பி.எஸ்.ஜி., கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில் கதிர் கல்லுாரியையும் வென்றது. அதேபோல், சி-மண்டலத்துக்கான போட்டிகள் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியிலும், 'டி'-மண்டலத்துக்கான போட்டி ஈரோடு, இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிக கல்லுாரியிலும் நடந்து வருகிறது.