/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒளிராத தெருவிளக்குகள்; எம்.எல்.ஏ.,விடம் குமுறல்
/
ஒளிராத தெருவிளக்குகள்; எம்.எல்.ஏ.,விடம் குமுறல்
ADDED : அக் 07, 2024 12:32 AM

வால்பாறை : வால்பாறை நகர அ.தி.மு.க., சார்பில், எஸ்டேட் பகுதியில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, நகர செயலாளர் மயில்கணேஷ், ஏ.டி.பி., தொழிற்சங்க தலைவர் அமீது ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது எஸ்டேட் தொழிலாளர்கள் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த தொழிலாளர் குடியிருப்பில் தெருவிளக்குகள் எரிவதில்லை. ரோடுகளும் போடப்படவில்லை. நகராட்சி கவுன்சிலர்களிடம் பல முறை கூறியும் அவர்களும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.
அவர்களிடம் எம்.எல்.ஏ., பேசும் போது, 'மலைப்பகுதியில் தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. ரோடு மற்றும் தெருவிளக்கு பிரச்னைக்கு மாவட்ட கலெக்டரிம் நேரில் பேசி தீர்வு காணப்படும்,' என்றார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,நகர துணை செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன், அவைத்தலைவர் சுடர்பாலு, வார்டு செயலாளர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.

