ADDED : ஆக 22, 2025 11:34 PM

நெகமம்: நெகமம், ஆண்டிபாளையம் ஊராட்சியில் உள்ள நாற்றுப்பண்ணை பராமரிப்பின்றி புதர் சூழ்ந்து உள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில், பசுமை பரப்பை அதிகரிக்க நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டது. இதில், ஆண்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேரிபாளையம் கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாற்றுப்பண்ணைக்கு பசுமை குடில் அமைக்கப்பட்டது.
இங்கு இருப்பு வைக்கப்பட்ட நாற்றுக்கள் கிராமத்தில் நடவு செய்ய மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இதன் வாயிலாக, பசுமை கிராமமாக மாற்ற திட்டமிடப்பட்டது.
தற்போது, இந்த நாற்றுப்பண்ணையில் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதுமட்டுமின்றி குடிலுக்கு பயன்படுத்திய பச்சை நிற போர்வைகள் ஆங்கே கிழிந்து தொங்குகிறது.
ஒன்றிய அதிகாரிகள் இந்த நாற்றுப்பண்ணையை மீண்டும் சீரமைக்கவும், நாற்றுக்களை முறையாக பராமரித்து இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.