தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உறுதிமொழி பத்திரம் கொடுத்து நா.த.க., வேட்பாளர் நுாதனம்

 உறுதிமொழி பத்திரம் கொடுத்து நா.த.க., வேட்பாளர் நுாதனம்

 உறுதிமொழி பத்திரம் கொடுத்து நா.த.க., வேட்பாளர் நுாதனம்


ADDED : ஏப் 19, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: ''நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனபின், ஆனைமலை ஆறு --- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன்,'' என, உறுதிமொழி பத்திரம் கொடுத்து நா.த.க., வேட்பாளர் நுாதன பிரசாரம் செய்தார்.

சூலுார் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன், செஞ்சேரிமலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, செஞ்சேரிமலை ஆதினம் முன்னிலையில், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு அளித்தார்.

அதில், 'சூலுாரில் நா.த.க., சார்பில் போட்டியிடும் நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனபின், ஆனைமலை ஆறு --- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பேன். சுல்தான்பேட்டை பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி கொண்டு வருவேன். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன்,'' எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சுற்றுவட்டாரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us