ADDED : மே 25, 2026 08:07 AM
அ நிறம் | அளவு
சூலூர்: சூலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி, சூலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நா.த.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முருகன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரமோகன், ஸ்ரீ நாத், கார்த்திகா, நர்மதா, பிரபாகரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பேசினர்.
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
