/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நா.த.க., ஆர்ப்பாட்டம்; பா.ஜ.,வினர் கண்டனம்
/
நா.த.க., ஆர்ப்பாட்டம்; பா.ஜ.,வினர் கண்டனம்
ADDED : ஜூலை 21, 2025 09:54 PM
வால்பாறை; நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, நா.த.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், நா.த.க.,மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் ஜெயசீலன், சரவணன், சல்மான் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், வால்பாறை நகராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய, நா.த.க., மாநில கொள்ளைபரப்பு செயலாளர் சரவணன், மதுரையில் நடந்த முருகபக்தர்கள் மாநாடு குறித்தும், ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் வால்பாறையில் நடந்த ஆடி மாத மஞ்சள் நீர் அபிேஷக விழா பேரணி குறித்தும் இழிவு படுத்தி பேசினார்.
இதற்கு, வால்பாறை பா.ஜ., ஹிந்துமுன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.