/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி
/
அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி
அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி
அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி
ADDED : ஜூலை 15, 2025 08:44 PM

வால்பாறை; வால்பாறையில், பயணியர் நிழற்கூரை அருகில், தேங்கி கிடக்கும் கழிவுகளால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள, ஸ்டேன்மோர் மருத்துவமனை செல்லும் வழியில், பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் குப்பை உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
ஸ்டேன்மோர், எம்.ஜி.ஆர்.,நகர் ஆற்றுப்பாலம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், ரோட்டோரத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் குப்பை குவிக்கப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஸ்டேன்மோர் ஆற்றுமட்டம் பகுதியில் வெளியாகும் குப்பையை நகராட்சி சார்பில் நாள்தோறும் அகற்ற வேண்டும். பயணியர் நிழற்கூரையை சுற்றியுள்ள புதரை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.