தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் சேவை

கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் சேவை

கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் சேவை


ADDED : அக் 29, 2024 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தீபாவளியை முன்னிட்டு, கோவை -- திண்டுக்கல் இடையே, இன்று முதல் வரும் 6ம் தேதி வரை, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வரும் 3ம் தேதி ஞாயிறு மட்டும், இந்த ரயில் இயக்கப்பட மாட்டாது. கோவையில் காலை 9:35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மதியம் 1:10 மணிக்கு திண்டுக்கல்லைச் சென்றடையும்.

மறுவழியில் திண்டுக்கல்லில், மதியம் 2:00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், கோவையை மாலை 5:50 மணிக்கு வந்தடையும். போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.

இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us