தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அதர்மம் அழிவைத்தரும்'

'அதர்மம் அழிவைத்தரும்'

'அதர்மம் அழிவைத்தரும்'


ADDED : அக் 08, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார் : செல்வ விநாயகர் கோவில் நவராத்திரி விழாவில், பக்தி சொற்பொழிவு நடந்தது.

சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவில் 57வது ஆண்டு நவராத்திரி விஜயதசமி அன்னதான விழா கடந்த 3ம் தேதி கொலு பூஜையுடன் துவங்கியது.

கடந்த 6ம் தேதி சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. 7ம் தேதி மாலை செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது.

நேற்று மனவளக்கலை மன்ற உதவி பேராசிரியை தேவகி திருவேங்கடம், 'கந்தனின் மகிமை' என்னும் தலைப்பில் பேசுகையில், ''புராணங்கள் மறைபொருளாக நமக்கு நீதி போதிக்கிறது. தர்மம் மட்டும் நிலைத்து நிற்கும்.

அதர்மம் எவ்வளவு காலமானாலும் அழிவை தரும். அனைவரிடத்தும் அன்பு செலுத்துதல் மற்றும் இறைவனிடம் சரண் அடைதலே நம் வாழ்வை மேம்படுத்தும்,'' என்றார்.

இன்று (9ம் தேதி) மாலை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமதாஸ் தலைமையில், 'பிள்ளைகள் முன்னேற்றத்திற்கு தேவை கண்டிப்பா, கனிவா,' என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

நாளை, ஓய்வு பெற்ற கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் நஞ்சையன் தலைமையில் வழக்காடு மன்றம் நடக்கிறது. வருகிற 11ம் தேதி மாலை வாண வேடிக்கையுடன், அம்மன் அழைப்பும், பரதநாட்டியமும் நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தியாகி பெட்டையன் சிலைக்கு மாலை அணிவித்தல், அபிஷேக பூஜை மற்றும் சிறுமுகை குழுவின் பஜனை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us