/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாடாபாத் அருகே மேலும் கீழும் ஆர்.சி.சி., வீடு; என்ன விலைக்கு வாங்கலாம்?
/
டாடாபாத் அருகே மேலும் கீழும் ஆர்.சி.சி., வீடு; என்ன விலைக்கு வாங்கலாம்?
டாடாபாத் அருகே மேலும் கீழும் ஆர்.சி.சி., வீடு; என்ன விலைக்கு வாங்கலாம்?
டாடாபாத் அருகே மேலும் கீழும் ஆர்.சி.சி., வீடு; என்ன விலைக்கு வாங்கலாம்?
ADDED : ஏப் 26, 2025 12:20 AM
கோவை வெள்ளாளப்பட்டி கிராமத்தில் டிரான்ஸ்போர்ட் நகர், 23 அடி ரோடு அகலத்தில் டீ.டி.சி.பி., அனுமதி கொண்ட, 4 சென்ட் இடத்தை என்ன விலைக்குவாங்கலாம்.
-சாவித்திரி, கோவை.
தாங்கள் கூறியுள்ள வெள்ளாளப்பட்டி கிராமம் என்பது, தற்போது முன்னேறிக்கொண்டிருக்கிறது. தற்போது, அபார்ட்மென்ட்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் குடியிருப்புகள் அமைந்து வருகின்றன. இதனால், சென்ட், 7.5 லட்சம் ரூபாய் பெறும்.
கோவை டாடாபாத், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே, மெயின் ரோட்டில் இருந்து உட்புறமாக, 10 அடி தடம், ஏழு சென்ட் இடம் மற்றும், 30 ஆண்டுகள் பழமையான மேலும், கீழும் உள்ள, 2,500 சதுரடி ஆர்.சி.சி., வீடு விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-இந்திராணி, கோவை.
தாங்கள் கூறிய இடம் காந்திபுரத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் உள்ளது. இருப்பினும் தங்கள் நிலத்தின் அணுகு பாதை, 10 அடிதான் உள்ளது. எனவே, மாநகராட்சியில் திட்ட அனுமதி வாங்குவதற்கு, 'ஜி பிளஸ்' ஒன்றால்தான் முடியும். இதனடிப்படையில் பார்த்தால் சென்ட் ரூ.30 லட்சம் வீதம் மற்றும் கட்டடத்தின் வயதை கருத்தில் கொண்டு வீட்டின் மதிப்பு, ரூ.2.5 கோடி இருக்கும்.
திருப்பூர் டவுனில் இருந்து, அங்கேரிபாளையம் ரோட்டில் உட்புறமாக, 12 அடித்தடத்தில் பழமையான ஓட்டு வீடு, 10 சென்ட் இடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்.
-முத்துக்கிருஷ்ணன், திருப்பூர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் என்பது பழமையான கிராமம். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ளது. தாங்கள் கூறிய இடம், 12 அடி தடம் என்பது குறுகலானது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ளதா என்று தெரியவில்லை. எனவே, இந்த இடத்தின் மதிப்பு சென்ட் ரூ.7 லட்சம் ஆகும்.
தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.