sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உப்பிலிபாளையம் ரவுண்டானாவில்.. தினமும் விபத்து உடனடியாக தீர்வு காண வேண்டும்

/

 உப்பிலிபாளையம் ரவுண்டானாவில்.. தினமும் விபத்து உடனடியாக தீர்வு காண வேண்டும்

 உப்பிலிபாளையம் ரவுண்டானாவில்.. தினமும் விபத்து உடனடியாக தீர்வு காண வேண்டும்

 உப்பிலிபாளையம் ரவுண்டானாவில்.. தினமும் விபத்து உடனடியாக தீர்வு காண வேண்டும்

1


ADDED : ஜன 27, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஜி.டி.நாயுடு மேம்பாலம் துவங்கும் உப்பிலிபாளையம் சந்திப்பில், போக்குவரத்து வடிவமைப்பு சரியாக திட்டமிடாததால், தினமும் பலமுறை வாகனங்கள் உரசுகின்றன; மோதுகின்றன. இப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

உப்பிலிபாளையத்திலிருந்து சின்னியம்பாளையம் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ., உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்ட மேம்பாலம் என்று பெயர் இருந்தாலும், உப்பிலிபாளையம் நுழைவாயிலிலிருந்து வாகனத்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும், ரவுண்டானாவில் மக்கள் சிரமப்படுகின்றனர்.

மேம்பாலத்திலிருந்து இறங்கி, அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், நஞ்சப்பா ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலக மார்க்கமாக செல்லும் வாகனங்களும், உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் சந்தித்துக் கொள்கின்றன.

முதலில் யார் செல்வது என்பதில், வாகன ஓட்டிகள் இடையே ஏற்படும் போட்டியால் தினமும் பலமுறை விபத்து நடக்கிறது. வாகன உரிமையாளர்கள் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி, தகராறில் ஈடுபடுவதால், பிற வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன.

இது குறித்து தினமும் புகார்கள் வருவதால், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், டிராபிக் போலீசார், வருவாய்த்துறையினர், போக்குவரத்துத்துறையினர் என்று அதிகாரிகள் குழுவே இப்பகுதியை ஆய்வு செய்துவிட்டது. ஆனாலும் இனியும் முடிவெடுக்காமல் உள்ளனர்.

இது குறித்து கலெக்டர் பவன்குமார் கூறியதாவது:

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, புதிய திட்டம் தயாராகி வருகிறது. ரூ.7 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும்.அது வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க,ரவுண்டானாவில் நின்று வாகனங்களை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசாரை அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு, கலெக்டர் பவன்குமார் கூறினார்.

திட்டம் செயல்பாட்டுக்கு வர தாமதமாகலாம். அதுவரை டிராபிக் போலீசார் சற்று 'ஆக்டிவ்' ஆக நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். விபத்து தவிர்க்க வேண்டும்.






      Dinamalar
      Follow us