/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்
/
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்
ADDED : மார் 18, 2025 04:25 AM

கோவை : கோவை மாநகராட்சி, 50வது வார்டு ராமலிங்கபுரத்தில், சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல், கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர் மெத்தனமாக உள்ளனர்.
கோவை மாநகராட்சி, 50வது வார்டு, உடையாம்பாளையம் கண்ணபிரான் மில்ஸ் அருகே ராமலிங்கபுரத்தில், 40 அடி சாலையை ஆக்கிரமித்து, ஓட்டு வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. சிலர் கடை மற்றும் மெஸ் நடத்துகின்றனர்.
மாநகராட்சியின் முயற்சியால், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தில், சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்தோருக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, கீரணத்தத்தில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன.
கெடு விதித்ததால் பலரும் வீடுகளை காலி செய்து விட்டனர். அவ்வீடுகளை இடித்து அகற்றி விட்டு, தார் சாலை போட வேண்டும். வீட்டை காலி செய்து ஓராண்டுக்கு மேலாகியும், மாநகராட்சி கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றினால், 40 அடி அகலத்துக்கு தார் ரோடு கிடைக்கும்.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் குமாரிடம் கேட்ட போது, ''கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலருக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன்,'' என்றார்.