/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர்பானங்கள் விற்பனையில் சுகாதாரம்: அதிகாரிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தல்
/
குளிர்பானங்கள் விற்பனையில் சுகாதாரம்: அதிகாரிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தல்
குளிர்பானங்கள் விற்பனையில் சுகாதாரம்: அதிகாரிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தல்
குளிர்பானங்கள் விற்பனையில் சுகாதாரம்: அதிகாரிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2024 11:10 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை, கலப்படமில்லாத சுத்தமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், உணவகங்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகளில், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு விற்பனை அதிகரிக்கிறது.
அதன்படி, சிலர், தற்காலிக கடை அமைப்பதுடன், உணவு பாதுகாப்புச்சட்டப்படி, உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெறுவதில்லை.
மாறாக கடையில் சுகாதாரம் பேணப்படாமல், துருப்பிடித்த பாத்திரங்களில் கூழ், மோர், பால், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்கின்றனர். அதன் வாயிலாக, தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதால், நுகர்வோருக்கு நோய் பாதிப்பும் ஏற்படுகிறது.
மக்கள் கூறியதாவது:
பெரிய அளவிலான கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள், சுகாதாரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுகிறது.
குளிர்பானங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோர், கலப்பிடமில்லாத மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையை கையாள வேண்டுமென, உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், 'பிரிட்ஜ்'ல் நீண்ட நாட்களாக வைக்கப்படும் குளிர்பானங்களை பருகும் மக்கள், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பல கடைகளில், பழரசம், குளிர்பானம், மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க நீளமான கரண்டி பயன்படுத்துவது கிடையாது. தரமற்ற பழச்சாறு விற்பனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

