/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கலெக்டரிடம் வலியுறுத்தல்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கலெக்டரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2025 12:10 AM
கோவை : சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையிலும், மனித உரிமை மீறல்களை தடுக்கவும், கோவையிலுள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் அறைகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று, பா.ம.க.,நிர்வாகி கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க., நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி கலெக்டரிடம் கொடுத்த மனு:
போலீஸ் ஸ்டேஷன்களில் மனித உரிமை மீறல்களை தடுக்கவும், நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் கோவை மாநகரில் உள்ள, 25 போலீஸ் ஸ்டேஷன்களில், 20 போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள இன்ஸ்பெக்டர் அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது.
எனவே அப்பாவி இளைஞர்கள், போலீஸ் விசாரணையில் உயிரிழப்பதை தடுக்கவும், மனித உரிமை மீறல்கள் நடக்காமல் தடுக்கவும், உடனடியாக கோவையில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியிருக்கிறார்.