/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடிந்து விழும் சுகாதார நிலையம் புது கட்டடம் கட்ட வலியுறுத்தல்..
/
இடிந்து விழும் சுகாதார நிலையம் புது கட்டடம் கட்ட வலியுறுத்தல்..
இடிந்து விழும் சுகாதார நிலையம் புது கட்டடம் கட்ட வலியுறுத்தல்..
இடிந்து விழும் சுகாதார நிலையம் புது கட்டடம் கட்ட வலியுறுத்தல்..
ADDED : நவ 29, 2024 11:26 PM
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி அருகே எம்மேகவுண்டன்பாளையம் துணை சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்,' என எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கிணத்துக்கடவு ஒன்றியம், செட்டியக்காபாளையம் ஊராட்சியில், எம்மேகவுண்டன்பாளையம் துணை சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
தற்போது, அந்த கட்டடம் பழுதடைந்து மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. கான்கிரீட் கம்பிகளும் வெளியே தெரிகின்றன. இதனால், இங்கு பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். மேற்கூரை விரிசல் வழியாக மழைநீர் உள்ளே வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.
தற்போது கட்டடம் பழுதடைந்துள்ளதால், பள்ளிக்கூடத்தில் உள்ள சிறு அறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, இந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.