/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
/
கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 07:10 AM

வால்பாறை: வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த புதுத்தோட்டம் தொழிலாளர் குடியிருப்பில் கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது புதுத்தோட்டம் காபி எஸ்டேட். இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
வனப்பகுதியை ஒட்டி இந்த எஸ்டேட் அமைந்துள்ளதால், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் வந்து செல்கின்றன.
ஆனால், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் தொழிலாளர்கள் வனவிலங்குகளின் பிடியில் சிக்கி தினமும் பரிதவிக்கின்றனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மின் கம்பம் இருந்தும், போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால், இரவு நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் தவிப்பதோடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, வால்பாறை நகராட்சி சார்பில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

