/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுகளை வீசிச்செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
கழிவுகளை வீசிச்செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கழிவுகளை வீசிச்செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கழிவுகளை வீசிச்செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2025 08:24 PM
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி பூசாரிப்பட்டி பை - பாஸ் ரோட்டில், கண்ணாடி மற்றும் கோழிகழிவுகளை வீசிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என சப் - கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி தெற்கு, கிழக்கு ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனு:
பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி பை -பாஸ் ரோட்டில், அடையாளம் தெரியாத வாகனங்கள் வாயிலாக பெரிய அளவில் கண்ணாடி கழிவுகள், கோழிகழிவுகள் கொட்டப்படுகின்றன.
இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கடும் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்களில் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி டெவலப்மென்ட் நகர் பகுதியில் தொடர்ந்து வீட்டு கழிவுகள், மருத்துவ கழிவுகள் சட்டவிரோதமாக வீசப்படுகின்றன. இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், குழந்தைகள், வயதானோர், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.