/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதம் அடைந்த ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதம் அடைந்த ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 11:56 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாமரைக்குளம் வீரப்பன் வீதி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, தாமரைக்குளம் வீரப்பன் வீதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் சென்று வரும் ரோடு ஆங்காங்கே சிதலமடைந்து காணப்படுகிறது.
இப்பகுதி மக்கள், பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்புக்கு செல்லவும், நல்லடிபாளையம் சுகாதார நிலையம் செல்லவும், இந்த சேதமடைந்த ரோட்டில் பயணிக்கும் போதும், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் சென்று வரவும் தடுமாறுகின்றனர்.
குறிப்பாக, வயதானவர்கள் இந்த ரோட்டில் நடக்க அச்சப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தியுள்ளனர்.