/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தொட்டியை சூழ்ந்த புதரை அகற்ற வலியுறுத்தல்
/
தண்ணீர் தொட்டியை சூழ்ந்த புதரை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 08:10 PM

நெகமம்; நெகமம், தாசநாயக்கன்பாளையம் தரை மட்ட தொட்டி மற்றும் நூலகம் அருகே உள்ள புதரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெகமம், காட்டம்பட்டி ஊராட்சி தாசநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள, நூலகம் மற்றும் தரைமட்ட தண்ணீர் தொட்டி ஒரே வளாக பகுதியில் அமைந்துள்ளது. தண்ணீர் தொட்டியை சுற்றிலும் அதிகளவு செடிகள் முளைத்து புதர் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், இதன் அருகில் உள்ள நூலகத்தின் வெளிப்புற சுவர் அருகில், செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், தரைமட்ட தொட்டியில் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
இதேபோன்று, நூலகத்தின் வெளிப்புறப் பகுதியில் இருந்து, பூச்சிகளும், விஷ ஜந்துக்களும் உள்ளே வர அதிக வாய்ப்புள்ளது. இவ்வளாகம் அருகில், குடியிருப்புகளும் அதிகம் உள்ளன. எனவே இப்பகுதியில் இருக்கும் புதரை அகற்றி சுத்தம் செய்ய, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.