/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2025 10:05 PM
நெகமம்; செங்குட்டைபாளையம் --- கக்கடவு செல்லும் ரோடு சேதமடைந்திருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
நெகமம் அருகே உள்ள வரதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட, செங்குட்டைபாளையத்தில் இருந்து மூட்டாம்பாளையம் மற்றும் கக்கடவு செல்லும் ரோட்டை அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில், ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ரோட்டோரத்தில் செடி, கொடிகள் முளைத்து ரோட்டை ஆக்கிரமித்து உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் டவுன் பஸ் செல்வதால், எதிரே பைக், கார் போன்ற வாகனங்கள் வந்தால், வழிவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைத்து, ரோட்டோரத்தை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் ரோட்டை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.