தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊர் பெயரில் எழுத்து பிழை; சரி செய்ய வலியுறுத்தல்

 ஊர் பெயரில் எழுத்து பிழை; சரி செய்ய வலியுறுத்தல்

 ஊர் பெயரில் எழுத்து பிழை; சரி செய்ய வலியுறுத்தல்


ADDED : பிப் 24, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனூர் பகுதியில் ஊர் பெயர் பலகையில் எழுத்துப்பிழை இருப்பதால், இதை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டோரம் பெயர் பலகையில், ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஒரு சில கிராமங்களின் பெயர் எழுத்துப் பிழையுடனும், கிலோமீட்டரின் அளவு தவறுதலாக உள்ளது.

இதில், சொக்கனூர் கிராமத்தின் பெயர் பலகையில், தமிழில் சரியாகவும், ஆங்கிலத்தில் தவறாகவும் உள்ளது. இதே போன்று முத்துக்கவுண்டனூர் வழித்தட பெயர் பலகை ஒன்றில், 'முத்துக்கவுண்டனூர் - 3 கி.மீ.,' எனவும், மற்றொன்றில் 'முத்துக்கவுண்டன்புதூர் - 4 கி.மீ.,' எனவும், தவறாகவும் உள்ளது.

இதனால், சொக்கனூர் பகுதிக்கு புதிதாக வரும் மக்களுக்கு குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில், பெயர் பலகையில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us