/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்க வரி விதிப்பு; ஜவுளித்துறைக்கு நெருக்கடி; முதல்வருடன் ஜவுளித்துறையினர் சந்திப்பு
/
அமெரிக்க வரி விதிப்பு; ஜவுளித்துறைக்கு நெருக்கடி; முதல்வருடன் ஜவுளித்துறையினர் சந்திப்பு
அமெரிக்க வரி விதிப்பு; ஜவுளித்துறைக்கு நெருக்கடி; முதல்வருடன் ஜவுளித்துறையினர் சந்திப்பு
அமெரிக்க வரி விதிப்பு; ஜவுளித்துறைக்கு நெருக்கடி; முதல்வருடன் ஜவுளித்துறையினர் சந்திப்பு
ADDED : ஆக 14, 2025 10:57 PM

கோவை; அமெரிக்க வரிவிதிப்பால் நெருக்கடியில் உள்ள தமிழக ஜவுளித்துறைக்கு நிவாரண உதவிகளை வழங்க, பிரதமருக்கு பரிந்துரைக்கும்படி, தமிழக முதல்வர் ஸ்டாலினை ஜவுளித்துறையினர் நேற்று சந்தித்து முறையிட்டனர்.
இதுதொடர்பாக, 'சைமா' தலைவர் சுந்தரராமன் அறிக்கை:
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்திருப்பது, நாட்டின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி மாநிலமான தமிழகத்துக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இது சார்ந்து சைமா உட்பட தொழில்துறை குழு, தொழில்துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், முதல்வரை ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தது. பிரதமரிடம் இருந்து நிவாரணத் தொகுப்பு வழங்க பரிந்துரை கடிதம் எழுத கோரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்க வரிவிதிப்பில் இருந்து தமிழக ஜவுளித் தொழிலை பாதுகாக்க, அசல் தொகையை திருப்பிச் செலுத்த, 2 ஆண்டு கால அவகாசத்தை நீட்டி க்க வேண்டும். அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 30 சதவீத பிணையமில்லா கடன் மற்றும், 5 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும். ஜவுளித் தொழில், வராக்கடனாக மாறுவதைத் தடுக்க இந்நடவடிக்கை முக்கியமானது. தற்போதைய அமெரிக்க வரிவிதிப்பு, கோவிட் சூழலுக்கு நிகரானது.
பெரும்பாலான அமெரிக்க வர்த்தகர்கள் தங்களது ஆர்டர்களை நிறுத்தி விட்டனர். பலர் விலைகளை மறுபரிசீலனை செய்கிறார்கள் அல்லது முற்றிலுமாக ரத்து செய்து விட்டனர்.
ஏற்றுமதி தயாரிப்புகளின் மீதான சுங்கம் மற்றும் வரிகள் குறைப்பு (ஆர்.ஓ.டி.டி.இ.பி.,) சலுகையை 5 சதவீதம் உயர்த்துவது, நுால் உட்பட அனைத்து ஜவுளி தயாரிப்பு ஏற்றுமதிகளுக்கு ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கடனை நீட்டிப்பது, புதிய சந்தையைக் கைப்பற்றவும், இருக்கும் சந்தையை தக்கவைக்கவும் உதவியாக இருக்கும்.
பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.
பருத்தி மதிப்பு சங்கிலிக்கு இணையாக 5 சதவீத ஜி.எஸ்.டி., அடுக்கின் கீழ், முழு மதிப்புச் சங்கிலியையும் கொண்டு வந்து, செயற்கை இழை மதிப்புச் சங்கிலியில், ஜி.எஸ்.டி., கட்டமைப்பை சரி செய்ய வேண்டும். சர்வதேச போட்டி விலையில் மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
20 ஆண்டுக்கு மேற்பட்ட காற்றாலைகளுக்கான வருடாந்திர வங்கித் திட்டத்தை தொடர்வது, புதுப்பித்தக்க எரிசக்தி விதிமுறைகளின் கீழ் சலுகைகளை நீட்டித்தல், மேற்கூரை சோலாருக்கு நெட்வொர்க் கட்டணங்களை திரும்பப் பெறல், ஓபன் அசெஸ் மின் கொள்முதலுக்கு ஓராண்டுக்கு மானியம் ஆகிய உதவிகள், தற்போதைய நெருக்கடியைத் தவிர்க்க உதவும்.
மேலும், ஒற்றைச் சாளர வழிமுறை வாயிலாக விரைவான ஏற்றுமதி பணத்தைத் திரும்பப் பெறவும், ஏற்றுமதி மற்றும் ஐ.டி.சி.,க்கான மாநில ஜி.எஸ்டி., ரீபண்ட்களை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கைகளை தொழிலமைப்புகள் முன்வைத்தன. இவற்றை கேட்ட முதல்வர், உரியனவற்றை பிரதமருக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு, கூறியுள்ளார்.