தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண்புழு உரத்தை பயன்படுத்துங்க!

மண்புழு உரத்தை பயன்படுத்துங்க!

மண்புழு உரத்தை பயன்படுத்துங்க!


ADDED : ஜூன் 27, 2025 09:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு; விவசாயத்தில், அதிகளவு மண் புழு உரத்தை பயன்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், 16 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமாக விவசாய பரப்பு உள்ளது. இதில், அதிகப்படியான விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பயிர்களுக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்காது. குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.

இதை தவிர்த்து, மண் புழு உரத்தை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மண்புழு உரத்தில், தழைச்சத்து, மணிச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது.

இதை உபயோகிப்பதால், ரசாயன உரத்தைக் காட்டிலும், கூடுதலான சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கிறது. இத்துடன் அதிக மகசூலும் கிடைக்கிறது. எனவே, விவசாயத்தில் மண்புழு உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும், என, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் மணிவண்ணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us