ADDED : மார் 13, 2024 11:48 PM
அ நிறம் | அளவு
கோவை : தெற்கு மண்டலம், 99வது வார்டுக்கு உட்பட்ட பி.என்.டி., காலனி, சமீம் கார்டன் பகுதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக மேயர் கல்பனா ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகத்தை துவக்கிவைத்தார்.
உடனிருந்த கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அப்பகுதி மக்களை அறிவுறுத்தினார்.
