/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணிப்பை பயன்படுத்துங்க! மாணவர்கள் விழிப்புணர்வு
/
துணிப்பை பயன்படுத்துங்க! மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 09, 2025 09:58 PM

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை, அக் ஷரா வித்யாஷரம் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்கள் சார்பில், நெகிழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செலாளிப்பாறை பயணியர் நிழற்கூரையில் நடந்த நிகழ்ச்சியை, பள்ளி தாளாளர் சில்பாஅட்சயா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், இயற்கையை அச்சுறுத்தும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவோம், என, மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.
அதன்பின், நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.