/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மரத்துாள் எரிகட்டிகள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும்'
/
'மரத்துாள் எரிகட்டிகள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும்'
'மரத்துாள் எரிகட்டிகள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும்'
'மரத்துாள் எரிகட்டிகள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும்'
ADDED : ஜூலை 08, 2025 09:48 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தேரம்பாளையம் கிராமத்தில், சிறு தொழில் செய்து வருபவர், தட்சணாமூர்த்தி, 27. இவர் பி.இ., சிவில் படித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சிறு தொழில் பயிற்சி கற்று, சான்றிதழ் பெற்றார். தற்போது தேரம்பாளையத்தில், உயிரி எரிபொருள் கட்டிகள் (பயோமாஸ் பிரிக்வெட்ஸ்) என்ற விறகு கட்டிகள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இது குறித்து தட்சணாமூர்த்தி கூறியதாவது:
மேட்டுப்பாளையம் வனக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மரத்துாளிலிருந்து உயிரி எரிபொருளான விறகு கட்டிகள் உற்பத்தி செய்யும் பயிற்சி அளித்தனர்.
அதில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின், வங்கி கடன் வாயிலாக சிறிய தொழிற்சாலை துவங்கினேன். இதில் மரத்துாள், கடலை பொட்டு ஆகியவற்றை கலந்து, இயந்திரத்தின் வாயிலாக அழுத்தம் கொடுக்கும் போது, கெட்டி தன்மை உடைய உயிரி எரிபொருள் கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உயிரி எரிபொருள் கட்டிகளை எரிபொருளாக பயன்படுத்துவதன் வாயிலாக, சுற்றுச்சூழல் மாசுபடுவது குறைகிறது. மேலும் நிலக்கரிக்கு பதிலாக இதை பயன்படுத்தும் போது, நின்று எரியக்கூடிய வகையிலும், வெப்பம் அதிகளவில் தரக்கூடிய வகையிலும் உள்ளது. அதனால் அதிகமான கம்பெனிகள் இதை வாங்கிச் செல்கின்றன. சிறு தொழில் என்றாலும், 20 குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறேன். செலவுகள் போக, மாதம், 40ல் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.
இது படித்து சுய தொழில் செய்யும் இளைஞர்களுக்கு, இது ஒரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.