/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யு.டி.எஸ்., நிதி நிறுவன மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு மீண்டும் ஜாமின்

ADDED : ஆக 18, 2025 09:44 PM
கோவை; யு.டி.எஸ்., நிதி நிறுவன மோசடி வழக்கில், அதன் நிர்வாக இயக்குனருக்கு, மீண்டும் ஜாமின் வழங்கப்பட்டது.
பீளமேட்டில் செயல்பட்டு வந்த யு.டி.எஸ்., என்ற நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, பல்வேறு திட்டங்களை அறிவித்தனர். இதை நம்பி முதலீடு செய்த, 76,000 பேரிடம், 1200 கோடி ரூபாய் வரை மோசடி செய்தனர்.
புகாரின் பேரில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, அந்நிறுவன நிர்வாக இயக்குனர், சூலுாரை சேர்ந்த ரமேஷ்,35, ரமேசின் தந்தை கோவிந்தசாமி,69, தாயார் லட்சுமி,59, மேலாளர் ஜஸ்டின் பிரபாகரன், 45, கிளை மேலாளர்கள் ஜஸ்கர், சுனில்குமார், கனகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது, கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட் கோர்ட்), கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமினில் சென்ற ரமேஷ், கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், கைது செய்யப்பட்டார்.
ஐகோர்ட்டில் ரமேஷ், ஜாமின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.