/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியில் பணியிடங்கள் காலி
/
மாநகராட்சியில் பணியிடங்கள் காலி
ADDED : ஜன 18, 2024 12:25 AM
கோவை : கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. நகரமைப்பு பிரிவுக்கு ஒரு நகரமைப்பு அலுவலர், மண்டலத்துக்கு இருவர் வீதம், 10 உதவி நகரமைப்பு அலுவலர்கள், 10 நகரமைப்பு ஆய்வர் பணியிடங்கள் தோற்றுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.இதன் படி, அதிகாரிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
வடக்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் எழில், உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடத்தை கூடுதலாக கவனிக்கிறார்.
தெற்கு மற்றும் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட, 40 வார்டுகளை, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி ஒருவரே கவனிக்கிறார்.
கிழக்கு மண்டலத்தில், உதவி பொறியாளராக பணிபுரியும் குமார் என்பவருக்கு, உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடம் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.
மேற்கு மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள காந்திமதி என்பவர், துாத்துக்குடியில் இருந்து வந்திருக்கிறார்.
இதன் காரணமாக, நகரமைப்பு பிரிவு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.