/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் காலியாக கிடக்கின்றன சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் பணிச்சுமை அதிகரிப்பதாக புகார்

ADDED : பிப் 18, 2025 06:34 AM
கோவை; தமிழகத்தில், கடந்த பத்தாண்டுகளாக, காலமுறை ஊதிய அடிப்படையில், சுகாதார ஆய்வாளர் கிரேடு -2 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும், 1,841 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. 5000 மக்கள் தொகைக்கு, ஒரு கிரேடு -2 சுகாதார ஆய்வாளர்கள் இருக்கவேண்டியது அவசியம்.
ஆனால், தமிழகத்தில் காலமுறை ஊதிய அடிப்படையில், கிரேடு-2 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில், 1000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
காலிப்பணியிடங்களால் பணிச்சுமை அதிகரித்து இருப்பதுடன், பல்வேறு பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக, அதிருப்தி எழுந்துள்ளது.பணிகள் உடனுக்குடன் நடக்காததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சுகாதார ஆய்வாளர் சங்கத்தின், மாவட்ட செயலாளர் மோகன் கூறுகையில், ''தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக, காலமுறை ஊதியத்தின்படி சுகாதார ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
கிரேடு -2 சுகாதார ஆய்வாளர்கள் ஒருவரும் இல்லை; தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டவர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; இதில், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிதாக துவக்கப்பட்ட, 386 ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிரேடு 1 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை; உடனடியாக உருவாக்க வேண்டும்,'' என்றார்.