/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர், உறுப்பினர் பணி காலியிடம்
/
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர், உறுப்பினர் பணி காலியிடம்
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர், உறுப்பினர் பணி காலியிடம்
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர், உறுப்பினர் பணி காலியிடம்
ADDED : பிப் 04, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாட்டில், 30 மாவட்ட தலை நகரங்களில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆணையத்திலும், ஒரு ஆணைய தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, நுகர்வோர் குறைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
இவற்றில், ஆறு மாவட்டங்களில் நுகர்வோர் ஆணைய தலைவர் பணியிடங்களும், 17 உறுப்பினர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், https://www.consumer.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.