/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் தடுப்பூசி; பெற்றோர் புகார்
/
பள்ளிகளில் தடுப்பூசி; பெற்றோர் புகார்
ADDED : ஜூலை 28, 2025 09:41 PM
அன்னுார்; 'அன்னுார் வட்டாரத்தில், சில துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை,' என புகார் எழுந்துள்ளது.
அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகளில் ஒன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமாக ஜூன் ஜூலை மாதங்களில் தடுப்பூசி போடப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியாகியும் இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'குழந்தைகளுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதிலிருந்து பாதுகாக்க பிறந்தது முதல் ஒவ்வொரு வயதிலும் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை தவறாமல் செலுத்த வேண்டும்.