/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜமீன் ஊத்துக்குளியில் நாய்களுக்கு தடுப்பூசி
/
ஜமீன் ஊத்துக்குளியில் நாய்களுக்கு தடுப்பூசி
ADDED : செப் 26, 2025 09:36 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில், நாய்களுக்கு ரேபிஸ் (வெறிநோய்) தடுப்பூசி போடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில், வீட்டு நாய் மற்றும் தெருநாய்களுக்கான ரேபிஸ் (வெறிநோய்) தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது.
அதில், வீதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, செயல்அலுவலர் மங்களேஸ்வரன், துணை தலைவர் சையது அபுதாஹூர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 29 தெருநாய்கள், 34 வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.