/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்களுக்கு தடுப்பூசி; களம் இறங்கிய கால்நடைத்துறை
/
தெரு நாய்களுக்கு தடுப்பூசி; களம் இறங்கிய கால்நடைத்துறை
தெரு நாய்களுக்கு தடுப்பூசி; களம் இறங்கிய கால்நடைத்துறை
தெரு நாய்களுக்கு தடுப்பூசி; களம் இறங்கிய கால்நடைத்துறை
ADDED : ஆக 27, 2025 10:52 PM
அன்னுார்; அன்னுாரில் 14 தெரு நாய்களை துரத்தி பிடித்த ஊழியர்கள் வெறிநாய் தடுப்பூசி செலுத்தினர்.
அன்னுார் பேரூராட்சியில் தெரு நாய்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து விட்டன. பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிக்கின்றன. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனர். இதையடுத்து அன்னுார் கால்நடை மருத்துவமனை சார்பில், டாக்டர் ஜெயக்குமாரி தலைமையில் முதுநிலை மேற்பார்வையாளர் பாசுமணி ஆகியோர் தடுப்பு ஊசி போடும் பணியை துவக்கினர்.
ஒண்டிப்புதூரிலிருந்து இதற்காக வரவழைக்கப்பட்ட பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூவர் நைலான் வலையை கொண்டு தெரு நாய்களை துரத்தி மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவற்றை சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி கால்நடை மருத்துவர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தினர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம், சத்தி ரோடு மற்றும் அல்லி குளத்தில் நேற்று ஒரே நாளில் 14 தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
இப்பணி தொடர்ந்து நடைபெறும் என செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.