தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடுப்பூசி போடும் பணி தீவிரம்

 தடுப்பூசி போடும் பணி தீவிரம்

 தடுப்பூசி போடும் பணி தீவிரம்


ADDED : மார் 11, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: தமிழகத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி, இலவசமாக போடும் திட்டம், கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, காரமடை வட்டார சுகாதாரத் துறைக்கு உட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள், சுகாதார நிலையங்களுக்கு வந்து இந்த தடுப்பூசியினை போடவும் அறிவுரை கூறி வருகின்றனர்.

இதுகுறித்து, காரமடை சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு சென்று சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், இனி வரும் நாட்களில் அதிக அளவில் சிறுமிகள் தடுப்பூசி போடுவதற்கு வருவார்கள். மேலும் பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போடவும் முடிவு செய்துள்ளோம், என்றார்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us