/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரம், உணவுப் பொருளை பாதுகாப்பாக இறக்க வடகோவை ஸ்டேஷனுக்கு மேற்கூரை தேவை
/
உரம், உணவுப் பொருளை பாதுகாப்பாக இறக்க வடகோவை ஸ்டேஷனுக்கு மேற்கூரை தேவை
உரம், உணவுப் பொருளை பாதுகாப்பாக இறக்க வடகோவை ஸ்டேஷனுக்கு மேற்கூரை தேவை
உரம், உணவுப் பொருளை பாதுகாப்பாக இறக்க வடகோவை ஸ்டேஷனுக்கு மேற்கூரை தேவை
ADDED : ஆக 07, 2025 09:46 PM

கோவை; மழையில் இருந்து உணவுப் பொருட்கள், உரம் ஆகியவற்றை காக்க வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களும், விவசாயத்துக்கு தேவையான பல்வேறு வகையான உரங்கள் உள்ளிட்ட பொருட்களும் சரக்கு ரயில்களில் வடகோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு எடுத்து வரப்படுகின்றன. இங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு உணவுப் பொருட்கள், உரம் எடுத்து செல்லப்படுகிறது.
பல ஆயிரம் டன் பொருட்கள் கையாளப்படும் இந்த ரயில்வே ஸ்டேஷனில், வெட்ட வெளியில் தான் இவை ரயிலில் இருந்து லாரிக்கு ஏற்றப்படுகின்றன. மழை பெய்தால் அவற்றை பாதுகாக்க முடியாது.
மழையில் இருந்து பொருட்களை காக்க அங்கு எவ்வித மேற்கூரையும் அமைக்கப்படாமல் உள்ளது. தானியங்கள், உரம் சேதமடைவதை தடுக்க மேற்கூரை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் தற்போது மேம்பாட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் இந்த விசயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனவே அப்பகுதியில் ஒரு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. முழுப்பகுதிக்கும் ஷெட் அமைக்க முடியாது. ரயில்வே தண்டவாளம் அருகே ரயில்கள் இயக்கத்துக்கான உயர் மின்னழுத்தம் செல்லக்கூடிய மின்கம்பங்கள், ஒயர்கள் செல்கின்றன. அதன் மீது, ஏதாவது பொருட்கள் தவறி விழுந்து விட்டால் பெரும் சேதம் ஏற்படும். அதைக்கருத்தில் கொண்டே ஷெட் அமைக்கப்படவில்லை. ஆனால், உணவுப் பொருட்கள், உரம் ஆகியவை ரயிலில் இருந்து லாரிகளுக்கு மாற்றப்படும் போது தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன,' என்றார்.