/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி மாத விழா
/
ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி மாத விழா
ADDED : மே 18, 2025 10:06 PM

மேட்டுப்பாளையம் ; காரமடை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி மாத முதல் சனிக்கிழமை விழா நடந்தது.
காரமடை அடுத்த மருதூரில் மிகவும் பழமையான, அனுமந்தராய சுவாமி ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெறும். வைகாசி மாத முதல் சனிக்கிழமை விழா மற்றும் இருபதாம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது.
அதிகாலை கோவில் நடை திறந்து மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மூலவர் ஆஞ்சநேயர் வீர மாருதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரமடை சுற்று பகுதியில் உள்ள பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.