ADDED : டிச 26, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: ராமானுஜர் வருகை தந்த சிறப்பு பெற்ற பாலமலை ரங்கநாதர் கோயிலில் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்கிறது.
செங்கோதை அம்மன், பூங்கோதை அம்மன் சமேத பாலமலை ரங்கநாதர், புதுப்பிக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக வந்து, கோவிலை சுற்றி, அமைக்கப்பட்டுள்ள பல்வேறு பந்தல்களில் எழுந்தருளுகிறார். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து வருகிறார்.

